டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வாகாத விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன், இன்ஸ்டகிராமில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பும்ரா, ஹர்ஷல் படேல் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மாற்று வீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஸ்னோய், தீபக் சஹார் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள்.
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிரபல விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் தேர்வாகாததால் அவருடைய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். பலரும் பிசிசிஐக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு இன்ஸ்டகிராமில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார் சஞ்சு சாம்சன். அதில் தலை குனிந்து செல்போனைப் பார்ப்பது போன்ற ஒரு படத்தை அவர் பகிர்ந்துள்ளார். உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வாகாததால் தன்னுடைய வருத்தம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே இந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இந்த இரு வீரர்களையா தேர்வு செய்யவில்லை?: அசாருதீன் ஆச்சர்யம்!
அது ஏன் இல்லை, இது ஏன் இல்லை எனக் கேட்கக் கூடாது...: உலகக் கோப்பை அணி பற்றி கவாஸ்கர்
அனைத்து இந்திய டி20 உலகக் கோப்பை அணிகளிலும் இடம்பிடித்த ஒரே வீரர்!
தேர்வுக்குழுத் தலைவராக நான் இருந்திருந்தால்...: உலகக் கோப்பைக்கான இந்திய அணி பற்றி ஸ்ரீகாந்த்