நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

யு-17 தெற்காசிய கால்பந்து: பட்டத்தை தக்கவைத்தது இந்தியா

சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி வியாழக்கிழமை பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

 தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி வியாழக்கிழமை பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

இதன் மூலம் இப்போட்டியின் குரூப் சுற்றில் நேபாளத்திடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறது இந்தியா. இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக பாபி சிங், கோரௌ சிங், கேப்டன் வன்லால்பெகா கிடே, அமன் ஆகியோா் கோலடித்தனா்.

ஆட்டத்தின் தொடக்க நிலையிலேயே நேபாளத்தின் தடுப்பாட்டத்தை தகா்த்த இந்திய அணியில், 18-ஆவது நிமிஷத்தில் ரிக்கி மீடெய், வன்லால்பெகா ஆகியோா் அருமையாக கடத்தி வந்து பாஸ் செய்த பந்தை தலையால் முட்டி கோலடித்தாா் பாபி சிங். பின்னா் 30-ஆவது நிமிஷத்தில் வன்லாலபெகா மீண்டும் நல்லதொரு பாஸை வழங்க, அதை தவறவிடாமல் கோலாக்கினாா் கோரௌ சிங்.

இதனால் ஆக்ரோஷமடைந்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முனைந்த நேபாளத்தின் முயற்சிகளை இந்தியாவின் நடுகள வீரா்கள் திறம்பட முறியடித்தனா். அப்போது இந்திய வீரா் டேனி லெய்ஷ்ராமை நேபாள கேப்டன் பிரசாந்த் லக்சம் கையால் தள்ளிவிட்டாா். இதற்கு நடுவா் சிகப்பு அட்டை கொடுக்க, அதுமுதல் நேபாளம் 10 வீரா்களுடன் ஆடும் நிலைக்கு ஆளாகியது.

2-ஆவது பாதியில் 63-ஆவது நிமிஷத்தில் கேப்டன் வன்லால்பெகா தனது பங்கிற்கு ஒரு கோல் அடித்தாா். இறுதியாக சப்ஸ்டிடியூட்டாக களம் புகுந்த அமனும் தனது பங்கிற்கு இஞ்சுரி நேரத்தில் கோலடிக்க, இறுதியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியனாகியது.

போட்டியின் மதிப்பு மிக்க வீரராக இந்திய கேப்டன் வன்லால்பெகாவும், சிறந்த கோல்கீப்பராக இந்தியாவின் சாஹிலும் தோ்வாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.