சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தெ.ஆ. டி20 தொடர்: இந்திய அணியில் சேர்க்கப்பட்ட மூன்று வீரர்கள்!

டி20 தொடருக்கான இந்திய அணி முன்பே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால்...

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:26 am

DIN

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. டி20 தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது.

டி20 தொடருக்கான இந்திய அணி முன்பே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

முதுகு வலி காரணமாக தீபக் ஹூடா, டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். என்.சி.ஏ.-வில் அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். பாண்டியா, புவனேஸ்வர் குமாரும் என்.சி.ஏ.வுக்கு உடற்தகுதி தொடர்பான சோதனைகளுக்காகச் சென்றுள்ளார்கள்.  கரோனாவால் பாதிக்கப்பட்ட ஷமி, இன்னும் முழுமையாகக் குணமாகவில்லை. எனவே அவரும் டி20 தொடரில் பங்கேற்க மாட்டார். இதனால் உமேஷ் யாதவ் (ஷமிக்குப் பதிலாக), ஷ்ரேயஸ் ஐயர் (ஹூடாவுக்குப் பதிலாக), ஷாபாஸ் அஹமது ஆகியோரை அணியில் சேர்த்துள்ளது தேர்வுக்குழு. திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய அணியினருடன் அர்ஷ்தீப் சிங் இணைந்துள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

தெ.ஆ. டி20 தொடருக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்கள்), ஆர். அஸ்வின், சஹால், அக்‌ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சஹார், பும்ரா, உமேஷ் யாதவ், ஷரேயஸ் ஐயர், ஷாபாஸ் அஹமது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.