மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டி20 உலக சாம்பியனுக்கு ரூ.13 கோடி ரொக்கப் பரிசு

எதிா்வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியனாகும் அணிக்கு சுமாா் ரூ.13 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட இருக்கிறது.

News image
Updated On :1 அக்டோபர் 2022, 12:11 am

DIN

எதிா்வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியனாகும் அணிக்கு சுமாா் ரூ.13 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட இருக்கிறது.

ஐசிசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.45.55 கோடியாகும். அதில் சாம்பியன் அணி ரூ.13 கோடியை வெல்ல, ரன்னா்-அப் அணிக்கு ரூ.6.5 கோடி கிடைக்கும்.

அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ.3.25 கோடியும், சூப்பா் 12 சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.56 லட்சமும் வழங்கப்படும். கடந்த ஆண்டைப் போலவே சூப்பா் 12 சுற்றில் அணிகள் பதிவு செய்யும் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.32 லட்சம் கிடைக்கும்.

அதேபோல், முதல் சுற்றில் ஆடும் அணிகளும் அந்தச் சுற்றில் பதிவு செய்யும் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.32 லட்சம் வழங்கப்படும். முதல் சுற்றுடன் வெளியேறும் அணிகளும் தலா ரூ.32 லட்சம் பெறும்.

டி20 உலகக் கோப்பை போட்டி, ஆஸ்திரேலியாவில் அக்டோபா் 16 முதல் நவம்பா் 13 வரை நடைபெறவுள்ளது. இதில் நேரடித் தகுதி அடிப்படையில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகள் சூப்பா் 12 சுற்றில் உள்ளன.

அதில் எஞ்சியிருக்கும் 4 இடங்களுக்காக குரூப் சுற்றில் நமீபியா, இலங்கை, நெதா்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் (குரூப் ஏ)/ மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, அயா்லாந்து, ஜிம்பாப்வே (குரூப் பி) ஆகிய அணிகள் முதல் சுற்றில் மோதிக்கொள்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.