கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

காமன்வெல்த் பாரா பளுதூக்குதல்: தங்கம் வென்ற இந்திய வீரர்

காமன்வெல்த் போட்டிகளில் பாரா பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் சுதிர் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 5:57 am

DIN

காமன்வெல்த் போட்டிகளில் பாரா பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் சுதிர் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவருக்கான பாரா பளுதூக்குதல் விளையாட்டில் ஹெவிவெயிட் பிரிவில் 212 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தார் இந்தியாவின் சுதிர் சிங். காமன்வெல்த் போட்டிகளில் சாதனையை ஏற்படுத்தி அவர் தங்கம் வென்றார். காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி பெறும் 8-வது தங்கம் இது. மேலும் 7 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 22 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. 

இந்த வெற்றியைக் கொண்டாட லண்டனில் நன்கு சுற்றப் போகிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டி, 2024 ஒலிம்பிக்ஸ் என இரு முக்கியப் போட்டிகளிலும் தங்கம் வெல்ல முயல்வேன் என்று சுதிர் பேட்டியளித்தார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.