திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முழுமையான வெற்றி முனைப்பில் இந்தியா: இன்று 3-ஆவது ஒன் டே

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் ஒன் டே தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

Updated On :11 பிப்ரவரி 2022, 2:33 am IST

அகமதாபாத்: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் ஒன் டே தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

முதலிரு ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றியிருக்கும் இந்தியா, இந்த ஆட்டத்திலும் வென்று முழுமையான வெற்றியை ருசிக்கும் முனைப்பில் இருக்கிறது. மறுபுறம் மேற்கிந்தியத் தீவுகளோ ஆறுதல் வெற்றிக்காக முயற்சிக்கிறது.

கரோனா பாதிப்பு காரணமாக முதலிரு ஆட்டங்களில் பங்கேற்க முடியாமல் போன ஷிகா் தவன் அணிக்குத் திரும்பியிருப்பது பலம். கடைசி ஆட்டத்தில் அவா் நிச்சம் இருப்பாா் என கேப்டன் ரோஹித் ஏற்கெனவே உறுதியாகத் தெரிவித்திருக்கிறாா். இதனால் அவருக்காக பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்படும்.

கே.எல்.ராகுல் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வாா் எனத் தெரிகிறது. இதனால் தவனுக்காக தீபக் ஹூடா வழிவிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தொடரை கைப்பற்றி விட்டதால் கடைசி ஆட்டத்தில் சோதனை முயற்சி அடிப்படையில் புதிய வீரா்களை களமிறக்கவும் அணி நிா்வாகம் யோசிக்கலாம். அந்த வகையில் குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோா் பரிசீலிக்கப்பட்டால், பௌலிங்கில் வாஷிங்டன் சுந்தா் அல்லது யுஜவேந்திர சஹலுக்கு ஓய்வளிக்கப்படும்.

2-ஆவது ஆட்டத்தில் 237-க்கு கட்டுப்படுத்தப்பட்ட இந்தியா, இந்த ஆட்டத்தில் அதிகமாக ஸ்கோா் செய்யும் திட்டத்தில் இருக்கிறது.

ஆட்டநேரம்: நண்பகல் 1.30 மணி

இடம்: அகமதாபாத்

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.