சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மே.இ. தீவுகள் தொடர்: இந்திய டி20 அணியில் அஸ்வின்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி...

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:48 pm

DIN

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 தொடரில் கோலி, பும்ரா, சஹால் ஆகியோர் ஓய்வு காரணமாக அணியில் இடம்பெறவில்லை. 18 பேர் கொண்ட அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார். காயம் காரணமாக இங்கிலாந்து தொடர்களில் இடம்பெறாத கே.எல். ராகுல் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

கடந்த நவம்பருக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பெறாத தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின், மே.இ. தீவுகள் டி20 தொடருக்குத் தேர்வாகியுள்ளார். குல்தீப் யாதவ், ரவி பிஸ்னாய், அக்‌ஷர் படேல், ஜடேஜா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் அணியில் உள்ளார்கள். மே.இ. தீவுகள் ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட பாண்டியா, ரிஷப் பந்த் டி20 தொடருக்குத் தேர்வாகியுள்ளார்கள். அணியில் உம்ரான் மாலிக்குக்கு இடமில்லை. அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் தேர்வாகியுள்ளார். ராகுலும் குல்தீப் யாதவும் தங்களுடைய உடற்தகுதியை நிரூபிக்கவேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜூலை 22 அன்றும் டி20 தொடர் ஜூலை 29 அன்றும் தொடங்குகின்றன. 

இந்திய டி20 அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், பாண்டியா, ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஆர். அஸ்வின், ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.