100 டெஸ்டுகளில் விளையாடுவேன் என நினைக்கவேயில்லை: விராட் கோலி

என் உடற்தகுதிக்காக நிறைய உழைத்துள்ளேன். இது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் இந்தச் சாதனைக்காகப் பெருமிதம் கொள்ளும்...
100 டெஸ்டுகளில் விளையாடுவேன் என நினைக்கவேயில்லை: விராட் கோலி

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரில் 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் நாளை முதல் மொஹலி மைதானத்தில் தொடங்குகிறது.

விராட் கோலி தனது 100-வது டெஸ்டை நாளை விளையாடவுள்ளார். இதற்காக இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கோலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

100-வது டெஸ்டில் விளையாடுவது பற்றி விராட் கோலி கூறியதாவது:

உண்மையாகவே நான் 100 டெஸ்டுகளில் விளையாடுவேன் என நினைக்கவில்லை. இது நீண்ட பயணம். 100 டெஸ்டுகளை விளையாடுகிறபோது ஏராளமான சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்றுள்ளேன். எனவே என்னால் 100 டெஸ்டுகளைத் தொட முடிந்ததற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். கடவுள் என்மீது கருணை பொழிந்துள்ளார்.

என் உடற்தகுதிக்காக நிறைய உழைத்துள்ளேன். இது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் இந்தச் சாதனைக்காகப் பெருமிதம் கொள்ளும் என் பயிற்சியாளருக்கும் முக்கியமான தருணம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com