நான் வேற மாதிரி : சஞ்சு சாம்சன்

ரஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் நான் ராகுல் திராவிட் மாதிரியோ, தோனி போலவோ இல்லை சற்று வித்தியாசமானவன் எனக் கூறியுள்ளார். 
படம்: டிவிட்டர் | சஞ்சு சாம்சன்
படம்: டிவிட்டர் | சஞ்சு சாம்சன்

ரஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் நான் ராகுல் திராவிட் மாதிரியோ, தோனி போலவோ இல்லை சற்று வித்தியாசமானவன் எனக் கூறியுள்ளார். 

ராஜஸ்தான் அணி இந்த முறை ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்றது. இறுதிப்போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வியுற்றது. அவர் இந்தத் தொடரில் 458 ரன்கள் 147 ஸ்டிரைக்ரேட்டுடன் விளையாடினார். ஆனால், முக்கியமான நேரத்தில் அவர் சரியாக ஆடவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
 
“நான் ராகுல் திராவிட் மாதிரியோ, தோனி மாதிரியோ அல்லது வேறு யாரு மாதிரியும் இல்லை, வித்தியாசமானவன். நான் இயற்கையாக இருக்க விரும்புகிறேன். முதலில், அணியின் மனநிலையை கணிப்பேன். சில நேரங்களில் அவர்கள் கொதிப்படைந்து காணப்படுவார்கள். அவர்களிடம் சென்று நீங்கள் உங்கள் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கூற முடியாது. சில நேரங்களில் எல்லோருமே தங்களது சிறப்பான திறைமைகளை வெளிக்கொணருங்கள் என சொல்லுவது முட்டாள்தனமாக இருக்கும். ராகுல் திராவிட் இளைஞர்களை உற்சாகப்படுத்துவார். அவர் அன்பாகவும் புரிந்துக் கொள்பவராகவும் இருப்பார். அதுதான் எங்களைச் சிறப்பாக விளையாட வைத்தது. நாங்களும் அதைத்தான் ராஜஸ்தான் அணியில் செயல்பட முயற்சிக்கிறோம்” என சஞ்சு சாம்சன் முன்னர் கூறியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com