நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இலங்கையின் தயவில் அரையிறுதிக்குள் நுழையுமா ஆஸ்திரேலியா?

ஆஸ்திரேலியாவால் அரையிறுதிக்கு நுழைய முடியுமா?

News image
ஆஸி. அணி (கோப்புப் படம்)
Updated On :4 நவம்பர் 2022, 12:15 pm

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது ஆஸ்திரேலியா. இதனால் இங்கிலாந்தை இலங்கை நாளை வென்றால் மட்டுமே ஆஸ்திரேலியாவால் அரையிறுதிக்கு நுழைய முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச், டேவிட் ஆகியோர் இடம்பெறவில்லை. ஸ்டார்க் நீக்கப்பட்டார். மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆஸி. அணியில் கிரீன், ஸ்மித், ரிச்சர்ட்சன் ஆகியோர் இடம்பெற்றார்கள்.

அணியில் சேர்க்கப்பட்ட கிரின், ஸ்மித் ஆகியோர் முறையே 3, 4 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தார்கள். வார்னர் 25, மிட்செல் மார்ஷ் 45 எடுத்தார்கள். கிளென் மேக்ஸ்வெல், 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Story image

ஆப்கானிஸ்தானை 106 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலையில் ஆப்கான்ஸ்தானின் இன்னிங்ஸ் தொடங்கியது. 6 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். 13-வது ஓவர் முடிவில் மேலும் விக்கெட் எதையும் இழக்காமல் 98 ரன்கள் எடுத்தது. ஸாம்பா வீசிய 14-வது ஓவரில் ஒரு ரன் அவுட் உள்பட 3 விக்கெட்டுகள் கிடைத்தன. அப்போது 9 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆப்கானிஸ்தான். 

கடைசி 3 ஓவர்களில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்டன. திடீரென ரஷித் கான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து ஆஸி. ரசிகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டபோது இன்னும் ஆவேசமாக விளையாடினார். ஒரு சிக்ஸரும் 2 பவுண்டரிகளும் அடித்து அந்த ஓவரில் 17 ரன்கள் எடுத்தார் ரஷித் கான். கடைசியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் நூலிழையில் தோற்றது ஆப்கானிஸ்தான். 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ரஷித் கான். 

Story image

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு நுழைவது இலங்கையின் கையில் தான் உள்ளது. நாளைய ஆட்டத்தில் இங்கிலாந்தை இலங்கை வீழ்த்தினால் ஆஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இங்கிலாந்து வெற்றி பெற்றால் நெட் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும். இலங்கை வெற்றி பெற்றாலும் 6 புள்ளிகளைக் கொண்டு அந்த அணியால் அரையிறுதிக்கு நுழைய முடியாது. அல்லது மழை காரணமாக இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கைவிடப்பட்டாலும் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும். 6 புள்ளிகளுடன் அந்த வாய்ப்பை இங்கிலாந்து இழந்துவிடும். இதனால் சிட்னியில் நாளை நடைபெறவுள்ள இங்கிலாந்து - இலங்கை ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.