விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் தமிழக வீரர் ஜெகதீசன் தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
அலூரில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹரியாணா அணிகள் மோதி வருகின்றன. இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் பிகாருக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆந்திராவை எளிதாக வீழ்த்தியது தமிழக அணி. 3-வது ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் கோவா அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹரியாணா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணிக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்து வரும் சாய் சுதர்சன் - ஜெகதீசன் ஜோடி இன்றும் அபாரமாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் 151 ரன்கள் சேர்த்தார்கள். சாய் சுதர்சன் 67 ரன்கள் எடுத்தார். கடந்த மூன்று ஆட்டங்களிலும் சதமடித்த ஜெகதீசன் இன்றும் சதம் அடித்து சாதனை நிகழ்த்தினார். அவர் 123 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் எடுத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்த 4-வது வீரர் என்கிற பெருமையை அடைந்தார். இதற்கு முன்பு குமார் சங்கக்காரா, அல்விரோ பீட்டர்சன், தேவ்தத் படிக்கல் ஆகியோர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்துள்ளார்கள்.
தமிழக அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணிக்காக விளையாடிய மோஹித் சர்மா, ஐபிஎல் நட்சத்திரம் ராகுல் தெவாதியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


