ஈரானை வீழ்த்தியது இங்கிலாந்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானை அசத்தலாக திங்கள்கிழமை வென்றது. 
ஈரானை வீழ்த்தியது இங்கிலாந்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானை அசத்தலாக திங்கள்கிழமை வென்றது. 

தோஹாவில் உள்ள காலிஃபா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைத்தது. ஆட்டத்தின் 35-ஆவது நிமிஷத்தில் தன் வசம் இருந்த பந்தை இங்கிலாந்தின் லூக் ஷா, பாக்ஸýக்குள்ளாக எதிரணி வீரர்கள் மையமிடாமல் இருந்த ஜூட் பெலிங்கமிடம் கிராஸ் செய்தார். ஜூட் அதை, ஈரான் கோல்கீப்பரிடம் சிக்காமல் கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினார். 

தொடர்ந்து 43-ஆவது நிமிஷத்தில் மாகிர் உதவியுடன் புகாயோ சகா அடித்த கோலால் இங்கிலாந்து 2-0 என முன்னேறியது. அடுத்ததாக ஹாரி கேன் கிராஸ் வழங்கிய பந்தை ரஹிம் ஸ்டெர்லிங் ஸ்கோர் (45+1) செய்ய, முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 3-0 என முன்னிலையில் இருந்தது. 

பின்னர் தொடர்ந்த ஆட்டத்தின் 62-ஆவது நிமிஷத்தில் புகாயோ சகா ரஹிம் ஸ்டெர்லிங் உதவியுடன் தனது 2-ஆவது கோலை பதிவு செய்தார். ஒருவழியாக, ஆட்டத்தின் 65-ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்தது ஈரான். இங்கிலாந்து தடுப்பாட்டத்தைக் கடந்து சக வீரர் கோலியாத் பாஸ் செய்த பந்தை அருமையாக கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினார் மெஹதி தரேமி. 

ஆனால் விட்டுக்கொடுக்காத இங்கிலாந்து 71-ஆவது நிமிஷத்தில், ஹாரி கேன் உதவியுடன் மார்கஸ் ராஷ்ஃபோர்டு அடித்த கோலால் 5-1 என முன்னேறியது. அந்த அணியின் ஜேக் கிரேலிஷ் 90-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, அணியின் கோல் எண்ணிக்கை 6 ஆனது. இறுதியாக, ஈரானுக்கு (90+12) கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிடாமல் மெஹதி தரேமி கோலடிக்க, ஆட்டம் 6-2 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது. 

வெற்றி: 3-ஆவது ஆட்டத்தில் நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் செனகலை வீழ்த்தியது. நெதர்லாந்துக்காக கோடி காப்கோ (84'), டேவி கிளாசென் (90+9') ஆகியோர் கோலடித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com