ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய மற்றொரு நியூசி. பிரபலம்!

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருந்து பிரபல வீரர் மார்டின் கப்தில் வெளியேறியுள்ளார்.
ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய மற்றொரு நியூசி. பிரபலம்!


நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருந்து பிரபல வீரர் மார்டின் கப்தில் வெளியேறியுள்ளார்.

டி20 லீக் போட்டிகளின் வளர்ச்சி காரணமாக கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவத்தும் அளிப்பது குறைந்து வருகிறது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் பிரபல வீரர்களான டிரெண்ட் போல்ட், கிராண்ட்ஹோம், ஜிம்மி நீஷம் ஆகிய மூவரும் ஒப்பந்தத்தில் இருந்து விலகி டி20 லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முன்வந்துள்ளார்கள். கிராண்ட்ஹோம் இதற்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது பிரபல நியூசிலாந்து வீரர் மார்டின் கப்திலும் ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து அணியில் கப்தில் இடம்பெற்றார். எனினும் ஃபின் ஆலனுக்கு நியூசிலாந்து அணி முக்கியத்துவம் அளித்தது. இதையடுத்து டி20 லீக் உள்ளிட்ட வேறு வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இருந்து கப்தில் விலகியுள்ளார். எனினும் நியூசிலாந்து அணியில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 3-வது நியூசிலாந்து வீரர், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் போன்ற பெருமைகளை மார்டின் கப்தில் கொண்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com