அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மழையால் பாதிக்கப்படுமா இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்?

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

News image
Updated On :19 அக்டோபர் 2022, 6:37 am

DIN

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 

மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

இந்நிலையில் மெல்போர்னில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. அன்றைய தினம் மெல்போர்னில் மழை பெய்ய 90% வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 முதல் 25 மி.மீ. மழை பெய்யும் எனக் கூறப்படுவதால் பரபரப்பான ஆட்டத்தைக் காண ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு இது கவலையளிக்கும் செய்தியாகவே உள்ளது. 
ஒரு டி20 ஆட்டத்தில் முடிவு எட்டப்பட்ட குறைந்தது 5 ஓவர்களாவது வீசப்பட வேண்டும். குரூப் ஆட்டங்களில் கூடுதல் நாள் கிடையாது. அரையிறுதி, இறுதிச்சுற்று ஆட்டங்களுக்கே அந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அக்டோபர் 22 அன்று நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டமும் (ஆஸ்திரேலியா - நியூசிலாந்து) மழையால் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. 90% (இடியுடன் கூடிய) மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.