காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி உள்பட பல போட்டிகளில் இங்கிலாந்தின் பிரபல வேகப் பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை.
சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஆர்ச்சர் விடுவிக்கப்பட்டார். 2022இல் ரூ.8 கோடி ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆர்ச்சர் மும்பை அணிக்கு ஒழுங்காக விளையாடவில்லை. காயம் காரணமாக மோசமான பங்களிப்பினையே அளித்தார்.
இதையும் படிக்க: விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷாய் ஹோப்!
துபையில் வரும் டிச.19ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் ஆர்ச்சர் பெயர் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்த வெற்றிக்கு காரணம் தோனி: மே.இ.தீவுகள் அணி வீரர் புகழாரம்!
28 வயதான ஆர்ச்சர் 2024இல் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளதால் அவரது வேலைப் பளுவைக் குறைக்க ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
34 இங்கிலாந்து வீரர்கள் இதுவரை ஐபிஎல் ஏலத்திற்காக பதிவு செய்துள்ளார்கள். ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



