முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

2வது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்த இளம் வீரர்! 

பாகிஸ்தான் நாட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெறும் 4 போட்டிகளிலே 5 விக்கெட்டுகளை 2 முறை எடுத்து சாதனைப் படைத்துள்ளார். 

News image
Updated On :10 ஜனவரி 2023, 12:39 pm

DIN

நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளை முடித்து தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 255 க்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் பாகிஸ்தான் அணி 48.1 ஒவரில் 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் நசீம் ஷா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றார். 

Story image

இரண்டாவது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் 19வயதான இளம் பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா. இது இவரது 4வது சர்வதேச ஒருநாள் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு ஆக.16இல் நெதர்லாந்துக்கு எதிராக முதன்முறையாக ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். அந்த தொடரின் 3வது போட்டியில் முதன்முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

தற்போது 2வது முறையாக இந்த சாதனையை வெறும் 4 போட்டிகளிலே சாத்தித்துள்ளார். இதுவரை 15 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.