
மஹாராஷ்டிர அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்துள்ளது.
புணேவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மஹாராஷ்டிர அணி, முதல் இன்னிங்ஸில் 98 ஓவர்களில் 446 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ருதுராஜ் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தமிழக அணியின் சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தமிழக அணி 2-வது நாள் முடிவில் 65 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் கடந்த இரு ஆட்டங்களிலும் சதமடித்த பிரதோஷ் ரஞ்சன் பால் இன்று 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடந்த ஆட்டத்தில் சதமடித்த விஜய் சங்கர் இன்றும் சிறப்பாக விளையாடி 104 ரன்கள் எடுத்தார். இருவருடைய பங்களிப்பினால் தமிழக அணியின் ஸ்கோர் 400 ரன்களைத் தாண்டியது. கீழ்வரிசை பேட்டர்களில் அஜித் ராம் 24 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணி, முதல் இன்னிங்ஸில் 118.5 ஓவர்களில் 404 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் மஹாராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் 42 ரன்கள் முன்னிலை பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.