தொடக்க ஆண்டிலேயே டபிள்யூபிஎல் சாதனை: பிசிசிஐ அறிவிப்பு

மகளிர் ஐபிஎல் போட்டி குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.
தொடக்க ஆண்டிலேயே டபிள்யூபிஎல் சாதனை: பிசிசிஐ அறிவிப்பு

மகளிர் ஐபிஎல் போட்டி குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.

2023 மகளிர் ஐபிஎல் போட்டி இந்த வருடம் முதல் தொடங்கவுள்ளது. இதில் 5 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. இந்நிலையில் மகளிர் ஐபிஎல் பற்றி  பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ட்விட்டரில் கூறியதாவது:

டபிள்யூபிஎல்  (WPL) என மகளிர் ஐபிஎல் போட்டிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.  கிரிக்கெட் விளையாட்டில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். 2008-ல் ஆடவர் ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டபோது கிடைத்த ஏலத்தொகையை விடவும் தற்போது அதிகத் தொகை டபிள்யூபிஎல் போட்டிக்குக் கிடைத்துள்ளது. அணிகளைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள். ஏலம் மூலமாக ரூ. 4669.99 கோடி கிடைத்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டுக்கான புரட்சி மலர்ந்துள்ளது. டபிள்யூபிஎல் போட்டி மகளிர் கிரிக்கெட்டுக்குத் தேவையான சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். 

மகளிர் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையையும் ரிலையன்ஸின் வையாகாம் நிறுவனம் பெற்றுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ரூ. 951 கோடி தர ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரூ. 7.09 கோடி. இந்த உரிமை இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் அனைத்து விதமான ஊடகங்களுக்கும் (தொலைக்காட்சி, டிஜிடல்) பொருந்தும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com