பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சௌத் ஷகீல் இரட்டைச் சதம்: 135 ரன்கள் பின்தங்கியுள்ளது இலங்கை!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சௌத் ஷாகீல் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். 

News image
இரட்டைச் சதமடித்த பாகிஸ்தான் வீரர் சௌத் ஷகீல் 
Updated On :18 ஜூலை 2023, 12:55 pm

DIN

பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் கடந்த ஜூலை 16இல் தொடங்கியது. 

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே பேட்டிங்கினை தேர்வு செய்தார். அதிகபட்சமாக தனஞ்செய டி சில்வா ஜோடி 122 ரன்களும் மேதிவ்ஸ் 61 ரன்களுக்கும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 312 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி. பாகிஸ்தான் சார்பாக ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரர் அஹமது தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். 

அடுத்து ஆடிய பகிஸ்தான் அணி 2ஆம் நாள் முடிவில் 221/5 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது 3ஆம் நாளில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 461 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

பாகிஸ்தான் சார்பாக சௌத் ஷகீல் அட்டகாசமாக விளையாடி இரட்டைச் சதம் அடித்தார். கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் 208* ரன்கள் எடுத்தார்.  இலங்கையில் இரட்டைச் சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஹா சல்மான் 83 ரன்களும் ஷான் மசூத் 39 ரன்களும் எடுத்தார்கள்.  

இலங்கை அணி சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளும் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள். 

3ஆம் நாள் முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது. கருணாரத்னே-6*, நிஷன் மதுஷகா- 8*. இலங்கை அணி பாகிஸ்தானைவிட 135 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.