அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வா? பிசிசிஐ தகவல்!

ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை காரணமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வா? பிசிசிஐ தகவல்!

ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை காரணமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஷுப்மன் கில்லுக்கும் ஓய்வு அளிக்கப்படலாம் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியா தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20  போட்டிகளில் விளையாடி வருகின்றன. இரு அணிகளும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகின்றன. அதன்பின் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இந்த நிலையில், ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை காரணமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாவது: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த பிறகு அவர் எவ்வாறு உணர்கிறார் என்பதைப் பொறுத்தே அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறுவாரா எனத் தெரியும். உலகக் கோப்பை மிக முக்கியமாக உள்ளதால் ஹார்திக் பாண்டியாவின் பணிச்சுமையை குறைக்க வாய்ப்புள்ளது. உலகக் கோப்பை தொடரில் ஹார்திக் பாண்டியா துணைக் கேப்டன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஆகஸ்ட் 18,20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com