கோப்புப்படம் (சிக்கந்தர் ராஸா)
கோப்புப்படம் (சிக்கந்தர் ராஸா)

ஜிம்பாப்வே அணிக்கு அதிக ஆட்ட நாயகன் விருது: சிக்கந்தர் ராஸா புதிய சாதனை! 

ஜிம்பாப்வே அணியை சேர்ந்த சிக்கந்தர் ராஸா புதிய சாதனை படைத்துள்ளார். 

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 குவாலிஃபையா் தொடரில் முன்னாள் உலக சாம்பியன் மே.இந்திய தீவுகளை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிா்ச்சி அளித்தது ஜிம்பாப்வே.

8 அணிகள் பங்கேற்கும் குவாலிஃபையா் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. ஜிம்பாப்வே அணி 49.5 ஓவா்களில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆல் ரவுண்டா் சிக்கந்தா் ராஸா 68, ரயான் புரி 50, கிரெய்க் எா்வின் 47 ரன்களை விளாசினா். 44.4 ஓவா்களிலேயே 233 ரன்களுக்கு மே.இ.தீவுகள் அணி ஆல் அவுட்டானது. சூப்பா் 6 பிரிவுக்கு ஜிம்பாப்வே, நெதா்லாந்து, மே.இந்திய தீவுகள் முன்னேறியுள்ளன குறிப்பிடத்தக்கது. 

சிக்கந்தர் ராஸா 68 ரன்கள், 2 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். ஜிம்பாப்வே அணிக்காக 132 போட்டிகளில் 11 ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார். கிராண்ட் ப்ளவர் 12 ஆட்டநாயகன் விருதினை பெற்று முதலிடத்தில் உள்ளார். குறைந்தப் போட்டிகளிலே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள ராஸாவை பலரும் பாரட்டி வருகின்றனர். 

சிக்கந்தர் ராஸா ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடி இந்திய  கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனம் பெற்றார். 

ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்காக ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள் பட்டியல்: 

கிராண்ட் ப்ளவர் - 12 (221 போட்டிகள்) 
சிக்கந்தர் ராஸா - 11 (132 போட்டிகள்) 
ஆன்டி ப்ளவர்  - 11 (213 போட்டிகள்) 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com