இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாளைய ஆட்டத்தில் அனைவருக்கும் இலவச அனுமதி: டபிள்யுபிஎல் அறிவிப்பு

மகளிர் தினத்தன்று நடைபெறும் ஆட்டத்தைக் காண அனைவரும் இலவச அனுமதி அளிக்கப்படும் என டபிள்யுபிஎல் நிர்வாகம் அமைத்துள்ளது. 

News image
Updated On :7 மார்ச் 2023, 10:59 am

DIN

மகளிர் தினத்தன்று நடைபெறும் ஆட்டத்தைக் காண அனைவரும் இலவச அனுமதி அளிக்கப்படும் என டபிள்யுபிஎல் நிர்வாகம் அமைத்துள்ளது. 

பிசிசிஐ சாா்பில் ஐந்து மகளிா் அணிகள் பங்கேற்கும் டபிள்யுபிஎல் (உமன்ஸ் ப்ரீமியா் லீக்) டி20 லீக் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுவதால் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டபிள்யுபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறுகிறது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 5 அணிகளும் இதர 4 அணிகளுடன் தலா 2 ஆட்டங்களில் விளையாடும். டபிள்யுபிஎல் போட்டியின் விளம்பரதாரராக டாடா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

டபிள்யுபிஎல் போட்டியில் பெண்களுக்கு இலவச அனுமதி. ஆண்கள், இணையத்தளம் வழியாக ரூ.100 கட்டணம் கொண்ட டிக்கெட்டைப் பெற்று ஆட்டங்களைக் காண முடியும். இந்நிலையில் மகளிர் தினமான நாளை (மார்ச் 8) ஆர்சிபி - குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் இலவச அனுமதி அளிக்கப்படுவதாக டபிள்யுபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.