நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஐபிஎல்: லக்னெள அணியின் புதிய சீருடையை விமர்சிக்கும் ரசிகர்கள்!

சீருடையின் வடிவமைப்பில் மாற்றம் வேண்டும் என்று பல ரசிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

News image
Updated On :8 மார்ச் 2023, 11:34 am

DIN

லக்னெள அணியின் புதிய சீருடையை ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள்.

ஐபிஇல் 2022 போட்டியில் புதிதாகக் களமிறங்கிய கே.எல். ராகுல் தலைமையிலான லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் நிகோலஸ் பூரனை ரூ. 16 கோடிக்குத் தேர்வு செய்தது. கே.எல். ராகுல், டி காக், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஸ்டாய்னிஸ், கிருனாள் பாண்டியா, மார்க் வுட், பிஸ்னோய், அவேஷ் கான் போன்ற பிரபல வீரர்கள் லக்னெள அணியில் உள்ளார்கள். 

ஐபிஎல் 2023 போட்டிக்கான லக்னெள அணியின் புதிய சீருடை நேற்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய சீருடையை கே.எல். ராகுல் அணிந்து எடுத்த புகைப்படமும் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டது.

புதிய சீருடையில் அணியின் பெயரும் லோகோவும் சரியாகத் தெரியாதது பெரிய குறையாக உள்ளது. மேலும் தில்லி, மும்பை, குஜராத் ஆகிய அணிகளின் சீருடை நீல வண்ணத்தில் உள்ள நிலையில் மீண்டும் மற்றொரு ஐபிஎல் அணியின் சீருடையும் அதே வண்ணத்தில் ஏன் இருக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பிபிஎல் போட்டியில் விதவிதமான வண்ணங்களில் அணிகளின் சீருடை உள்ளது. அதுபோன்று ஐபிஎல்-லிலும் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

முக்கியமான சீருடையில் அணியின் பெயரும் இலச்சினையும் சரியாகத் தெரியாததால் சீருடையின் வடிவமைப்பில் மாற்றம் வேண்டும் என்று பல ரசிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.