இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

டபிள்யுபிஎல்: முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி அணி!

டபிள்யுபிஎல் போட்டியில் முதன்முறையாக வென்றுள்ளது ஆர்சிபி அணி. 

News image
Updated On :15 மார்ச் 2023, 5:47 pm

DIN

அலீசா ஹேலி தலைமையிலான யு.பி. வாரியர்ஸ் அணி அணியும் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

யு.பி. அணி 19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்களும், கிரண் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் தலா 22 ரன்களும் எடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களையே எடுத்தனர். 

மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

136 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய ஆர்சிபி அணி ஆரம்பித்திலேயே விக்கெட் இழந்து தடுமாறியது. அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா டக் அவுட் ஆனார். பின்னர் வந்த எல்லிஸ் பெரி 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்த ஜோடி நிதானமாக ஆடியது. 

ஹீதர் நைட்- கனிகா அஹுஜா ஜோடி சிறப்பாக விளையாடினர். பின்னர் வந்த ரிச்சா கோஷ் வெற்றிக்கு உதவினார். கனிகா அஹுஜா 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அசத்தினார். ரிச்சா கோஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 ரன்களும் ஹீதர் நைட் 24 ரன்களும் எடுத்தனர். 

18 ஓவரில் 136 ரன்கள் எடுத்து தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆர்சிபி அணி. 6 போட்டிகளில் இதுதான் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. 

கனிகா அஹுஜா பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.