அண்ணன் - தம்பி அணிக்கு பலப்பரீட்சை: லக்னௌ அணி பந்து வீச்சு - டீ காக் அணியில் சேர்ப்பு! 

லக்னௌ அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 
படம்: ட்விட்டர்
படம்: ட்விட்டர்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணிக்கும் 3வது இடத்தில் இருக்கும் லக்னௌ அணிக்கும் இந்தப் போட்டி முக்கியமானது. நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. 

லக்னௌ அணியில் நவீனுக்கு பதிலாக பிரபல தென்னாப்பிரிக்க வீரர் டீ காக் இடம் பெற்றுள்ளார். மேலும் ஆவேஷ் கானும் சேர்க்கப்பட்டுள்ளார். குஜராத் அணியில் எந்த மாற்றமும் இல்லை. 

குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் லக்னௌ கேப்டன் கிருணால் பாண்டியாவும் சகோதரர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்தப் போட்டியில் முதன்முறையாக சகோதரர்கள் கேப்டன்களாக விளையாடுகிறார்கள்.

லக்னௌ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதால கிருணால் பாண்டியாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்ணன் தம்பியில் யார் ஜெயிப்பார்களென ரசிகர்களும் ஆவலுடன் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com