மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சஹால் சுழலில் சிக்கிய கொல்கத்தா: ராஜஸ்தானுக்கு 150 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

News image
Updated On :11 மே 2023, 4:18 pm

DIN

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் குர்பாஸ் களமிறங்கினர். ஜேசன் ராய் 10 ரன்களிலும், குர்பாஸ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது. இருப்பினும், நிதிஷ் ராணா 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின் களமிறங்கியவர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 42 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா மற்றும் கே.எம்.ஆசிப் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.