சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்தது.இந்தப் போட்டியில் குஜராத் அணி நீல இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸியில் விளையாடியது.
முதல் ஓவரிலேயே சாஹா பூச்சியத்தில் ஆட்டமிழந்தாலும் கில் மற்றும் சாய் சுதர்ஷன் அட்டகாசமாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் குவித்தனர். 15வது ஓவரில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தார். 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கில் 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடக்கம். சாய் சுதர்ஷன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய குஜராத் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர் முடிவில் குஜராத் அணி 188/9 ரன்கள் எடுத்தது.
ஹைதராபாத் அணி சார்பாக புவனேஷ்வர் குமார் அபாரமாக பந்து வீசினார். 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










