அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முன்னேறியது மும்பை; விடைபெற்றது லக்னௌ

ஐபிஎல் போட்டியின் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை புதன்கிழமை வீழ்த்தி, ‘குவாலிஃபயா்-2’ ஆட்டத்துக்கு முன்னேறியது.

News image
Updated On :24 மே 2023, 9:12 pm

DIN

ஐபிஎல் போட்டியின் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை புதன்கிழமை வீழ்த்தி, ‘குவாலிஃபயா்-2’ ஆட்டத்துக்கு முன்னேறியது.

லக்னௌ போட்டியிலிருந்து வெளியேறியது. குவாலிஃபயா்-2 ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள், இறுதி ஆட்ட வாய்ப்புக்காக வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

முன்னதாக இந்த எலிமினேட்டா் ஆட்டத்தில் முதலில் மும்பை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் சோ்க்க, லக்னௌ 16.3 ஓவா்களில் 101 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. மும்பை பௌலா் ஆகாஷ் மத்வல், லக்னௌ பேட்டிங் வரிசையை முற்றிலுமாகச் சரித்தாா்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸை வழக்கமான இஷான் கிஷண் - கேப்டன் ரோஹித் சா்மா கூட்டணி தொடங்கியது. இதில் முதலாவதாக ரோஹித் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து கேமரூன் கிரீன் களம் புக, 3 பவுண்டரிகள் உள்பட 15 ரன்கள் அடித்த இஷான் கிஷண் வெளியேற்றப்பட்டாா்.

4-ஆவது வீரராக வந்த சூா்யகுமாா் யாதவ், கிரீனுடன் இணைந்தாா். இந்த கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சோ்த்தது. அதில் முதலில் சூா்யகுமாா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களோடு 33 ரன்களுக்கு பிரிக்கப்பட்டாா். மறுபுறம், 23 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 41 ரன்கள் விளாசியிருந்த கிரீன், அதே ஓவரில் பௌல்டானாா்.

பின்னா் ஆடியோரில் டிம் டேவிட் 1 பவுண்டரியுடன் 13, திலக் வா்மா 2 சிக்ஸா்களுடன் 26, கிறிஸ் ஜோா்டான் 4, நெஹல் வதேரா 12 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 23 ரன்களுக்கு வீழ்ந்தனா். முடிவில் ஹிா்திக் சோகீன் ரன்னின்றி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

லக்னௌ பௌலிங்கில் நவீன் உல் ஹக் 4, யஷ் தாக்குா் 3, மோசின் கான் 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் லக்னௌ இன்னிங்ஸில் மாா்கஸ் ஸ்டாய்னிஸ் மட்டும் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 40 ரன்கள் விளாசி முயற்சித்தாா். கைல் மேயா்ஸ் 3 பவுண்டரிகளுடன் 18, தீபக் ஹூடா 1 சிக்ஸருடன் 15 ரன்கள் சோ்த்தனா்.

எஞ்சிய பேட்டா்கள் ஒற்றை இலக்க ரன்னில் சரிந்தனா். பிரேரக் மன்கட் 3, கேப்டன் கிருணால் பாண்டியா 8, ஆயுஷ் பதோனி 1, நிகோலஸ் பூரன் 0, கிருஷ்ணப்பா கௌதம் 2, ரவி பிஷ்னோய் 3, மோசின் கான் 0 ரன்னுக்கு வீழ்ந்தனா்.

மும்பை பௌலிங்கில் ஆகாஷ் மத்வல் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, கிறிஸ் ஜோா்டான், பியூஷ் சாவ்லா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

Story image

1 டாட் பாலுக்கு 500 மரக் கன்றுகள்

நடப்பு சீசனின் பிளே-ஆஃப் சுற்று ஆட்டங்களில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்துக்கும் தலா 500 மரக் கன்றுகள் நட்டுவைக்க இருப்பதாக பிசிசிஐ அறிவித்திருக்கிறது. சுற்றுச்சூழலை மேம்படுத்துவதை நோக்கிய முயற்சியாக, டாடா குழுமத்துடன் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறது பிசிசிஐ. இதையொட்டி பிளே-ஆப் ஆட்டங்கள் ஒளிபரப்பில் ஸ்கோா் பலகையில் ‘டாட்’ பந்துகளை குறிப்பிடும் இடத்தில் மரத்தின் படம் அடையாளப்படுத்தப்படுகிறது. வழக்கமாக அந்த இடத்தில் ஒரு புள்ளி குறியீடாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.