அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இறுதிப் போட்டியில் குஜராத்: மும்பை படுதோல்வி!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2-வது போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மும்பை படுதோல்வி அடைந்தது.

News image
Updated On :26 மே 2023, 6:44 pm

DIN

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2-வது போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மும்பை படுதோல்வி அடைந்தது.

குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் விளையாடி மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்தது.

முதலில் விளையாடிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில், மும்பை அணியின் பந்துவீச்சைப் சிதறடித்து 60 பந்துகளில் 129 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக நின்ற சாய் சுதர்ஷன் 43, கேப்டன் ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் குவித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 233 ரன்களை குஜராத் பேட்டர்கள் குவித்தனர்.

தொடர்ந்து, மாபெரும் இலக்கை விரட்டிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, வதேரா அடுத்தடுத்து அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மாவும், சூர்யகுமார் யாதவும் மும்பை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் முனைப்பில் அதிரடி காட்டினர். 14 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் திலக் வர்மா, ரஷித் கான் சூழலில் வீழ்ந்தார்.

அடுத்து லிட்டில் பந்தில் கிரீன் அவுட்டாக, சிறிது அதிரடி காட்டிய சூர்யகுமார் 61 ரன்களில் மோகித் சர்மா பந்தில் போல்டானார்.

தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட்டாக 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து மும்பை அணி ஆல் அவுட்டானது.

சிறப்பாக பந்துவீசிய குஜராத் அணியின் மோகித் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.