ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவிருந்த இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், டாஸ் வீசப்படுவதற்கான நேரத்துக்கும் முன்பாகவே அகமதாபாதில் இடி மின்னலுடன் பலத்த மழை பொழியத் தொடங்கியது. இதனால் ஆட்டம் இன்று மாலை 7.30க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றும் ஆட்டம் நடைபெறவில்லையெனில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இர்பான் பதான் தனியார் தொலைக்காட்சியில் சென்னை அணியை பற்றி கூறியதாவது:
நீங்கள் சிஎஸ்கே பக்கம் இருந்தால் எல்லோருக்கும் உங்களை பிடிக்கும். தமிழ்நாட்டு மக்கள் உங்கள் மீது அன்பு செலுத்த நேரமெடுக்கும் ஆனால் உங்களை ஒரு முறை நேசிக்க ஆர்ம்பித்துவிட்டால் உங்களை வணங்க ஆரம்பித்துவிடுவர். அவர்கள் தோனியை நேசிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். நீங்கள் நிலாவிற்கு சென்றாலும் அங்கு சிஎஸ்கே ரசிகர்கள் இருப்பார்கள். தோனிக்காக சென்னை அணி வெற்றி பெற வேண்டுமென நினைக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



