50-வது சதம்! சச்சின் முன்னிலையில் சாதனையை முறியடித்த விராட் கோலி!

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோலி சதமடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடித்துள்ளார்.
50-வது சதம்! சச்சின் முன்னிலையில் சாதனையை முறியடித்த விராட் கோலி!

மும்பை வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பைத் தொடரின்   முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.  

துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 47 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த சுப்மன் கில் நியூசி. பந்துவீச்சை திணறடித்தார். பின், திடீரென ஏற்பட்ட தசைப்பிடிப்புக் காரணமாக தற்காலிக ஓய்வாக பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, ஷ்ரேயஸ் ஐயர் புதிய பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார். 

அதே நேரம், ரோகித்துக்குப் பின் களமிறங்கிய விராட் கோலி தன் சிறப்பான ஆட்டத்தால் பவுண்டரிகளை விளாசி நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தலைவலி கொடுக்க ஆரம்பித்தார்.

விரைவிலேயே தன் 72-வது அரைசதத்தை பதிவு செய்தவர், நிதானமாக ஆடி 108 பந்துகளில் 100 ரன்களை அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதத்தை முறியடித்து தன் 50-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. இந்த சதத்தை அடித்தபின் வான்கடே மைதானத்திலிருந்து பெருவாரியான ரசிகர்கள் எழுந்து நின்று கோலிக்கு ஆரவாரம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com