2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 352 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸி. அணி! 

பயிற்சி ஆட்டத்தில் 50 ஒவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 351/7 ரன்கள் எடுத்துள்ளது. 

News image
Updated On :5 அக்டோபர் 2023, 4:41 am

DIN

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடபெறறு வருகின்றன. ஆஸி.அணி தனது பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதியது. அந்தப் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. 

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸி. அணி 50 ஓவர்களில் ரன்கல் எடுத்துள்ளடது.  தொடக்கமே சிறப்பக இருந்த ஆஸி. அணிக்கு 83 ரன்களில் முதல் விக்கெட் இழந்தது.  அடுத்து ஸ்மித்- லபுஷேன் ஜோடி ஆட்டமிழக்க மேக்ஸ்வெல்-கிரீன் இணை சிறப்பாக விளையாடி அணியை நிலைநிறுத்தினார்கள். 

மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 77 ரன்களும், ஜோஷ் இங்கிலிஷ், வார்னர் 48 ரன்களும், லபுஷேன் 40 ரன்களும், கேமரூன் கிரீன் 50 ரன்களும் எடுத்தார்கள். 

Story image

பாகிஸ்தான் சார்பாக உஸாமா மிரா 2 விக்கெட்டுகளும், நவாஸ், ஷதாப், ஹாரிஷ் ரௌப், முகமது வாசிம் ஜுனியர் தலா 1 விக்கெட்டினையும் எடுத்தார்கள். 

பாகிஸ்தான் அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியுற்ற நிலையில் இந்தப் போட்டியிலாவது வெற்றி பெறுமா என பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 

மழையின் காரணமாக இந்தியா-நெதர்லாந்து போட்டி கைவிடப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.