இந்தியாவுக்கு எதிரான போட்டி: ஆஸி. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.


உலகக் கோப்பை தொடர் அக்.5ஆம் தேதி தொடங்கியது. உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி இன்று சென்னையில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ளது.
டாஸ் வென்ற ஆஸி. அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இதையும் படிக்க: ஜெயசூர்யா சாதனையை முறியடித்த மெண்டிஸ்!
இந்திய அணியில் ஷுப்மன் கில் இடம்பெறவில்லை. இன்னும் காய்ச்சல் குணமாகாததால் அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் விளையாட உள்ளார். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் என வலுவான ஸ்பின் அட்டாக்குடன் களமிறங்குகிறது இந்திய அணி.
ஆஸி. அணியில் ஜாம்பா மட்டுமே ஸ்பின் பௌலர். மற்றவர்கள் வேகப் பந்து வீச்சாளர்கள், பேட்டர்கள், ஆல்ரவுண்டர்கள். அதனால் இந்தப் போட்டியில் இந்திய அணி வலுவாக உள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, உலகக் கோப்பையை வெல்வது எனது முடிக்கப்படாத வேலை என நேற்று கூறியிருந்தார். அதனால் இந்தப் போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா: வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்மித், லபுஷேன், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா.
இந்தியா: ரோஹித், இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அஸ்வின், குல்தீப், பும்ரா, சிராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...