நான் மோசமான பந்துவீச்சாளர் கிடையாது: முகமது சிராஜ்

ஒரு ஆட்டத்தில் மோசமான பந்துவீச்சை வெளிபடுத்தியதால் அது என்னை மோசமான பந்துவீச்சாளராக மாற்றிவிடாது என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
நான் மோசமான பந்துவீச்சாளர் கிடையாது: முகமது சிராஜ்

ஒரு ஆட்டத்தில் மோசமான பந்துவீச்சை வெளிபடுத்தியதால் அது என்னை மோசமான பந்துவீச்சாளராக மாற்றிவிடாது என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையின் 9-வது ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 8  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் எதிரணிக்கு அதிக ரன்களை வழங்கினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசிய அவர் விக்கெட்டுகள் ஏதும் எடுக்காமல் 76 ரன்கள் வழங்கியிருப்பார்.  நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அவர் முக்கியமான தருணத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விக்கெட் உள்பட 2  விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பாபர் அசாம், முகமது ரிஸ்வானுடன் வலுவாக கூட்டணி அமைத்து விளையாடி கொண்டிருக்கையில் அவரது விக்கெட்டை வீழ்த்தி முகமது சிராஜ் அசத்தினார்.

இந்த நிலையில், ஒரு ஆட்டத்தில் மோசமான பந்துவீச்சை வெளிபடுத்தியதால் அது என்னை மோசமான பந்துவீச்சாளராக மாற்றிவிடாது என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடனான போட்டிக்குப் பிறகு இதனை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எல்லா நேரங்களும் ஒரே மாதிரியாக இருக்காது. சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதனால், ஒரு போட்டியில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் நான் மோசமான பந்துவீச்சாளர் கிடையாது என எனக்கு நானே நினைத்துக் கொண்டேன். நான் எப்போதும் அதிக தன்னம்பிக்கையுடன் இருப்பேன். நான் நன்றாக பந்துவீசுகிறேன். நான் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்க வேண்டும் எனக் கூறிக் கொள்வேன். அந்த தன்னம்பிக்கை என்னை சிறப்பாக பந்துவீசச் செய்கிறது. ஒரு போட்டியில் சரியாக பந்துவீசாததால் நான் மோசமான பந்துவீச்சாளர் என்று கிடையாது. நான் தன்னம்பிக்கையுடன் பந்துவீசினேன். இன்று அதற்கான பலன் கிடைத்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com