வலைப்பயிற்சியில் டிராவிஸ் ஹெட்: ஆஸ்திரேலிய அணியுடன் இணைவாரா?

காயத்திலிருந்து மீண்ட ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இன்று (அக்டோபர் 15) வலைப்பயிற்சி மேற்கொண்டார்.
வலைப்பயிற்சியில்  டிராவிஸ் ஹெட்: ஆஸ்திரேலிய அணியுடன் இணைவாரா?

காயத்திலிருந்து மீண்ட ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இன்று (அக்டோபர் 15) வலைப்பயிற்சி மேற்கொண்டார்.

உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கையில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் தொடக்கப் போட்டிகளில் ஹெட் இடம்பெறமாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் காயத்திலிருந்து குணமடைந்து இன்று வலைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். 

அவர் வருகிற வியாழக்கிழமை (அக்டோபர் 19) ஆஸ்திரேலிய அணியுடன்  இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியுடன் வியாழக்கிழமை இணைந்தாலும் மறுநாள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் முழு உடல்தகுதியுடன் இருக்கும்பட்சத்தில் அக்டோபர் 25 ஆம் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் களமிங்குவார் எனவும் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக டிராவிஸ் ஹெட் தெரிவித்திருப்பதாவது: தற்போது காயத்திலிருந்து குணமடைந்து நன்றாக உணர்கிறேன். நாங்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம் என முடிவெடுத்தோம். அறுவை சிகிச்சை மேற்கொண்டால் குணமடைவதற்கு 10 வாரங்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனால் நாங்கள் எலும்பு முறிவுக்கு பட்டையை (பிளேட்) வைத்து சிகிச்சை மேற்கொண்டோம். அதில் குணமாக குறைந்தது 6 வாரங்கள் ஆகும் எனக் கூறப்பட்டது. அதன்படி நெதர்லாந்துடனான போட்டிக்கு முன்பு அந்த 6  வாரங்கள் முடிவடைகின்றன. நான் இன்னும் ஃபீல்டிங் செய்து பார்க்கவில்லை. அது எப்படி இருக்கப் போகிறது என தெரியவில்லை. அணியில் இடம்பெறுவதற்கு முன்பு இன்னும் சில விஷயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com