கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அசத்திய விராட் கோலி: இந்தியா அபார வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

News image
Updated On :22 அக்டோபர் 2023, 4:49 pm

DIN

உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம், உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக முறை 5  விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

தொடர்ந்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் 26 ரன்களை எடுத்து விக்கெட் ஆனார். கேப்டன் ரோகித், அதிரடியாக விளையாடி 46 ரன்களில் அவுட் ஆனார். 

அதன்பின், களமிறங்கிய விராட் கோலி தன் அசத்தலான ஆட்டத்தால் 95 ரன்கள் எடுத்து இறுதியில் சதம் அடிப்பதற்குள் தன் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஜடேஜா 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். நியூசிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், இந்த வெற்றி மூலம் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.