/

முன்னாள் இந்திய கேப்டனின் மறைவுக்கு விராட் கோலி இரங்கல்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடியின் மறைவுக்கு இந்திய அணியின் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :23 அக்டோபர் 2023, 1:29 pm

DIN

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடியின் மறைவுக்கு இந்திய அணியின் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிகச் சிறந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளருமான பிஷன் சிங் பேடி உடல்நலக் குறைவு காரணமாக இன்று (அக்டோபர் 23) காலமானார். 

இந்த நிலையில், அவரது மறைவுக்கு இந்திய அணியின் விராட் கோலி எக்ஸ் வலைத்தளப் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது: பிஷன் சிங் பேடி அவர்களின் மறைவு செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.