இந்திய அணியின் கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடெமி சான்றிதழ் வழங்கியுள்ளதால் அவர் 15 பேர் அடங்கிய உலகக் கோப்பைக்கான உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய வீரர்கள் 15 பேர் அடங்கிய உத்தேச அணி விவரம் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக இந்திய வீரர் கே.எல்.ராகுல் நீண்ட நாள்கள் அணியில் இடம் பிடிக்காமல் இருந்தார். அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிகெட் அகாடெமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். காயத்திலிருந்து குணமடைந்த அவர் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் இருந்து அவர் விலகினார்.
இந்த நிலையில், இந்திய அணியின் கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடெமி சான்றிதழ் வழங்கியுள்ளதால் அவர் 15 பேர் அடங்கிய உலகக் கோப்பைக்கான உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளார்.
இதையும் படிக்க: ஆதித்யா எல்-1: புதிருக்கு விடை தேடும் பயணம்!
உலகக் கோப்பைக்கான இந்திய அணி நாளை மறுநாள் (செப்டம்பர் 5) அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தேர்வுக் குழுவினர் ராகுலின் உடற்தகுதி குறித்து தெரிந்து கொண்டு அணி வீரர்கள் விவரங்களை அறிவிக்கலாம் என முடிவு செய்திருந்தனர். தற்போது, கே.எல்.ராகுல் முழுவதும் குணமடைந்துள்ளதால் அவர் அணியில் இடம் பிடிப்பது உறுதியாகியுள்ளது. அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்துக்கு இஷான் கிஷன் உள்ளார். இதனால், சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைப்பதற்கு சிக்கல் எழுந்துள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


