2021-ஆம் ஆண்டின் சிறந்த வீரராக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டவர் ஷாஹீன் ஷா அப்ரிடி. சா்கேரிபீல்ட் சோபா்ஸ் விருது ஏற்படுத்தப்பட்டபின் முதன்முறையாக இந்த விருதைப் பெறும் பாகிஸ்தான் வீரா் என்ற சிறப்பை ஷாஷீன் அப்ரிடி பெற்றவரும் இவரே.
3 வகையான அனைத்து சா்வதேச ஆட்டங்களில் 219 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், காயம் காரணமாக ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்தும் இங்கிலாந்துத் தொடரிலிருந்தும் ஷாஹீன் அஃப்ரிடி விலகினார். நியூசிலாந்தில் நடைபெறும் முத்தரப்பு டி20 போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. எனினும் டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் அவர் இடம்பெற்றார். ஷாஷீன் சிறப்பாக பந்து வீசினாலும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
ஐசிசி தரவரிசையில் டெஸ்ட்டில் 6வது இடத்திலும், ஒருநாள் போட்டியில் 8வது இடத்திலும், டி20யில் 15வது இடத்திலும் உள்ளார்.
.jpg)
பாகிஸ்தானின் அதிரடி மன்னன் ஷாகித் அப்ரிடியின் மகளான அன்ஷாவை திருமணம் செய்துள்ளார். இதில் பாகிஸ்தான் அணியினர் கலந்து கொண்டனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அதிரடி மன்னன் ஷாகித் அப்ரிடி கூறியதாவது:
மகள் என்பவர் நமது தோட்டத்தின் மிகச்சிறந்த பூ. ஏனெனில் அவர்கள் சிறந்த ஆசிவாதத்துடன் பூக்கிறார்கள். ஒரு மகள் என்பது நீங்கள் சிரிக்கவும் கனவு காணவும் உங்கள் முழு மனதுடன் நேசிக்கும் ஒருவர். பெற்றோராக நாங்கள் எங்களது மகளை ஷாஹீன் அப்ரிடிக்கு திருமணம் செய்துள்ளோம். இருவருக்கும் வாழ்த்துகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு: உதவி ஆணையர் உள்பட 8 பேர் சஸ்பெண்ட்!

ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!

கார்கில் போரில் இன்னுயிரை ஈந்த வீரர்களின் நினைவைப் போற்றுகிறோம்: மு.க. ஸ்டாலின்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல் இந்தியராக சாம்பியனான அனாஹத் சிங்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



