நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

டிஎன்பிஎல் ஏலத்தில் பங்கேற்ற அஸ்வின்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பிரபல சுழற்பந்துவீச்சாளர் ஆர். அஸ்வின்...

News image
Updated On :23 பிப்ரவரி 2023, 3:10 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பிரபல சுழற்பந்துவீச்சாளர் ஆர். அஸ்வின், சென்னையில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் ஏலத்தில் பங்கேற்றுள்ளார்.

டிஎன்பிஎல் 2022 கோப்பையை கோவை, சேப்பாக் ஆகிய இரு அணிகளும் பகிர்ந்துகொண்டன. டிஎன்பிஎல் கோப்பையை சேப்பாக் அணி 4-வது முறையாக வென்றுள்ளது. கோவை அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறை. 

இந்நிலையில் முதல்முறையாக டிஎன்பிஎல் போட்டிக்கு வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. 2022 ஐபிஎல் ஏலத்தைத் தொகுத்து வழங்கிய சாரு சர்மா, இந்த வருட டிஎன்பிஎல் ஏலத்தைத் தொகுத்து வழங்குகிறார். சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்று வரும் ஏலத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பாக பிரபல சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் பங்கேற்றுள்ளார். அந்த அணி வீரராக சமீபத்தில் தக்கவைக்கப்பட்ட அஸ்வின், ஏலத்தில் பங்கேற்று வீரர்களின் தேர்வில் தன்னுடைய ஆலோசனையை வழங்கியுள்ளார். 

ஏலத்தில் சோனு யாதவை ரூ. 15.20 லட்சத்துக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் சஞ்சய் யாதவை ரூ. 17.6 லட்சத்துக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் தேர்வு செய்துள்ளன. வருண் சக்ரவர்த்தி, பாபா இந்திரஜித் போன்ற வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்துள்ளது திண்டுக்கல் அணி. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் அஸ்வின், தற்போது சென்னைக்குத் திரும்பியுள்ளார். 3-வது டெஸ்ட், மார்ச் 1-ல் தான் நடைபெறும் என்பதால் சில நாள்கள் ஓய்வு எடுத்துவிட்டு, இந்தூருக்குச் செல்வார் எனத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.