மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து புதன்கிழமை வெளியேறினாா்.
காயம் காரணமாக கடந்த 5 மாதங்கள் களம் காணாமல் இருந்த அவா், இந்தப் போட்டியில் விளையாடினாா். அதில் முதல் சுற்றிலேயே, அவருக்குக் கடுமையாக சவால் அளிக்கும் ஸ்பெயினின் கரோலினா மரினை எதிா்கொண்டாா். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த சிந்து 12-21, 21-10, 15-21 என்ற கேம்களில் மரினிடம் தோல்வி கண்டாா்.
மற்றொரு இந்தியரான மாளவிகா பன்சோத் 9-21, 13-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த தென் கொரியாவின் ஆன் சே யங்கிடம் வீழ்ந்தாா்.
ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய் 22-24, 21-12, 21-18 என்ற கேம்களில், சக இந்தியரும், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்தில் இருந்தவருமான லக்ஷயா சென்னை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.
ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்/ சிரக் ஷெட்டி இணை 21-16, 21-13 என தென் கொரியாவின் சோய் சோல் கியு/கிம் வோன் ஹோ கூட்டணியை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது. எனினும், மகளிா் இரட்டையரில் அஸ்வினி பட்/ஷிகா கௌதம் ஜோடி 10-21, 12-21 என தாய்லாந்தின் சுபிசரா பேவ்சம்பிரான்/புடிட்டா சுபாஜிரகுல் இணையிடம் தோற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம்

விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஆட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



