சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஷுப்மன் கில் சதம், கோலி அரை சதம்: 3-வது நாளில் பதிலடி தந்த இந்தியா

இளம் வீரர் ஷுப்மன் கில் சதமும் கோலி அரை சதமும் எடுத்துள்ளார்கள்.

News image
Updated On :11 மார்ச் 2023, 11:52 am

DIN

4-வது டெஸ்டில் 3-வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. இளம் வீரர் ஷுப்மன் கில் சதமும் கோலி அரை சதமும் எடுத்துள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் வியாழன் அன்று தொடங்கியது. 

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் எடுத்தது. கவாஜா 180, கிரீன் 114 ரன்கள் எடுத்தார்கள். அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை இன்று விளையாடி வருகிறது.

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, 58 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களைக் கடந்த 7-வது இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா - கில் 74 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். இளம் வீரர் ஷுப்மன் கில், பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் 90 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். 

3-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 65, புஜாரா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். உணவு இடைவேளைக்குப் பிறகு ரன்கள் எடுப்பது சிரமமாக இருந்தது. கூர்மையான பந்துவீச்சும் ஸ்மித்தின் தலைமைப்பண்பும் இந்திய பேட்டர்களுக்குச் சவாலாக இருந்தன. இதனால் நிதானமாக ரன்கள் சேர்த்தார்கள் ஷுப்மன் கில்லும் புஜாராவும். 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுக்க 219 ரன்கள் தேவைப்பட்டன.

மிகவும் கவனமாக விளையாடிய ஷுப்மன் கில், 194 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இது அவருடைய 2-வது டெஸ்ட் சதம். 

Story image

121 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த புஜாரா, மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். காயமடைந்ததன் காரணமாக கவனம் சிதறிய ஷுப்மன் கில், 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு விராட் கோலி - ஜடேஜா ஜோடி 3-வது நாள் முடியும் வரை பொறுப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. நீண்ட நாளாக டெஸ்டில் சரியாக விளையாடாமல் இருக்கும் விராட் கோலி, 107 பந்துகளில் அரை சதமெடுத்தார். 16 டெஸ்ட் இன்னிங்ஸில் அவர் எடுத்துள்ள முதல் அரை சதம் இது. 

3-வது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 99 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 59, ஜடேஜா 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 191 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.