எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஆசியக் கோப்பை: பாகிஸ்தானுக்கு 267 ரன்கள் இலக்கு!

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி இஷான் கிஷன் மற்றும் ஹார்திக் பாண்டியாவின் பொறுப்பான ஆட்டத்தால் 266  ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

News image
Updated On :2 செப்டம்பர் 2023, 2:25 pm

DIN

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி இஷான் கிஷன் மற்றும் ஹார்திக் பாண்டியாவின் பொறுப்பான ஆட்டத்தால் 266  ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

ஆசியக் கோப்பை தொடரில் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ்  வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தனர். ரோஹித் சர்மா ( 11 ரன்கள்), ஷுப்மன் கில் (10 ரன்கள்), விராட் கோலி (4 ரன்கள்) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ( 14 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சீரான இடைவெளிகளில் பவுண்டரிகள் அடிக்க இந்திய அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இஷான் கிஷன் 82 ரன்கள் ( 9  பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தும், ஹார்திக் பாண்டியா 87 ரன்கள் (7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 14 ரன்களிலும், ஷர்துல் தாக்குர் 3  ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இறுதியில், இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகின் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹரிஷ் ரௌஃப் மற்றும் நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.