
நடிகர் அஜித் குமார் துணிவு படத்தைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் கலந்துகொண்டு கேக் ஊட்டி தன் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
32 வயதாகும் நடராஜன், தற்போது ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்கிற கிராமத்தில் பிறந்து இந்திய கிரிக்கெட் அணி வரை சென்ற நடராஜன் பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறார். இவரின், வாழ்க்கையைத் தழுவி திரைப்படம் எடுக்க நடிகர் சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







