/

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
இந்திய மகளிரணி- படம் | பிசிசிஐ
Updated On :16 ஏப்ரல் 2024, 2:17 pm

DIN

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிரணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் அசத்திய ஆஷா சோபனா மற்றும் சஜனா சஜீவன் அறிமுக வீராங்கனைகளாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஏப்ரல் 28 முதல் தொடங்கவுள்ளது. அனைத்துப் போட்டிகளுமே சில்ஹட்டில் நடைபெறவுள்ளது.

டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்

ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, தயாளன் ஹேமலதா, சஜனா சஜீவன், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஷ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ராகர், அமன்ஜோத் கௌர், ஸ்ரேயங்கா பாட்டீல், ஷைகா இஷாக், ஆஷா சோபனா, ரேனுகா சிங் தாக்குர் மற்றும் டிட்டாஸ் சாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.