8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

டி20 உலகக் கோப்பைக்கான விளம்பரத் தூதராக உசைன் போல்ட் நியமனம்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான விளம்பரத் தூதராக பிரபல தடகள வீரர் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

உசைன் போல்ட் - படம் | ஐசிசி

Published On :25 ஏப்ரல் 2024, 4:52 pm IST

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான விளம்பரத் தூதராக பிரபல தடகள வீரர் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ள நிலையில், உசைன் போல்ட்டை விளம்பரத் தூதராக ஐசிசி நியமித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

100 மீட்டர், 200 மீட்டர் தடகளப்போட்டிகளில் உசைன் போல்ட் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின்போது வரலாறு படைத்தார். கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவரான அவரை டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான விளம்பரத் தூதராக ஐசிசி நியமித்துள்ளது.

இது தொடர்பாக ஐசிசி முதன்மை நிர்வாக அதிகாரி (சிஇஓ) கூறியதாவது: உசைன் போல்ட் உலகம் முழுவதும் அறியப்பட்ட விளையாட்டு வீரர். டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான விளம்பரத் தூதராக அவரை நியமிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். கிரிக்கெட் மீதான அவரது அதீத ஆர்வம் அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட்டை நேசிப்பவரான அவர் விளம்பரத் தூதர் பொறுப்புக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என்றார்.

விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து உசைன் போல்ட் கூறியதாவது: எதிர்வரும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கரீபியன் தீவுகளில் கிரிக்கெட் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாக பார்க்கப்படும். கிரிக்கெட்டுக்கென எனது இதயத்தில் எப்போதும் சிறப்பான இடம் உண்டு என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.