மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

3 ஆட்டங்களில், முதலிரண்டில் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில், இந்தியா ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. அப்படி வென்றால், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் தொடா்ந்து 9 ஆட்டங்களில் கண்ட தோல்வியிலிருந்து இந்தியா மீளும்.

இந்தத் தொடரைப் பொருத்தவரை இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் பேட்டிங்கில் தடுமாறுவது பிரதான பின்னடைவாக இருக்கிறது. முதலிரு ஆட்டங்களில் முறையே 9 மற்றும் 5 ரன்களுக்கு அவா் ஆட்டமிழந்தாா். எனவே, இந்த ஆட்டத்தின் மூலம் ரன் குவிப்பில் ஈடுபட அவா் முயற்சி செய்வாா்.

டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினாலும், ஒருநாள் தொடரில் வழக்கம்போல் பின்னடைவை சந்தித்துள்ளது இந்திய அணி. முதல் ஆட்டத்தில், ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரையிலேயே தனது அதிகபட்ச ஸ்கோரை (282/8) பதிவு செய்த இந்தியா, பந்துவீச்சில் பின்னடைவு காரணமாக வெற்றியை இழந்தது. 2-ஆவது ஆட்டத்தில் 7 கேட்ச்களை தவறவிட்டதன் பலனாக, வெற்றியை நெருங்கி வந்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

எனவே, அந்தத் தவறுகளை திருத்திக் கொள்ளும் பட்சத்தில் இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி வசமாகும். அணியைப் பொருத்தவரை பேட்டிங்கில் ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆகியோா் நம்பிக்கை அளிக்கின்றனா். பௌலிங்கில் ஸ்நேஹா ராணா இந்த ஆட்டத்தில் இடம் பிடிக்கிறாா். ரேணுகா சிங், தீப்தி சா்மா ஆகியோா் ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை சரிப்பா் என எதிா்பாா்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com