அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற தென்னாப்பிரிக்க டி20 தொடர் சிறந்த வாய்ப்பு: கிரீம் ஸ்மித்

தென்னாப்பிரிக்க வீரர்களின் திறமையை தென்னாப்பிரிக்க டி20 (எஸ்ஏ டி20) தொடரில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தென்னாப்பிரிக்க டி20 லீக்கின் தலைவர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜனவரி 2024, 12:02 pm

DIN

தென்னாப்பிரிக்க வீரர்களின் திறமையை தென்னாப்பிரிக்க டி20 (எஸ்ஏ டி20) தொடரில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தென்னாப்பிரிக்க டி20 லீக்கின் தலைவர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரை முன்மாதிரியாக வைத்து தொடங்கப்பட்டது தென்னாப்பிரிக்க டி20 தொடர். இந்த டி20  தொடரில் 6 அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே இந்த 6 அணிகளுக்கும் உரிமையாளர்களாக உள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தென்னாப்பிரிக்க டி20 தொடரின் இரண்டாவது சீசன் நாளை மறுநாள் (ஜனவரி 10) முதல் தொடங்கி பிப்ரவரி 10 வரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க டி20 தொடரில் பிரிடோரியா கேப்பிடல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் சாம்பியன் பட்டம் வென்றது. 

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க வீரர்களின் திறமையை தென்னாப்பிரிக்க டி20 (எஸ்ஏ டி20) தொடரில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தென்னாப்பிரிக்க டி20 லீக்கின் தலைவர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்க டி20 தொடரின் இந்த சீசனை பார்ப்பதற்கு நான் ஆர்வமாக உள்ளேன். தென்னாப்பிரிக்க டி20 தொடருக்காக நிறைய உழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சில காரணங்களுக்காக நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன். முதலாவதாக தென்னாப்பிரிக்க டி20 லீக்கின் 6 அணிகளும் மிகுந்த வலிமையான அணியாக உள்ளனர். அனைத்து அணிகளிலும் தென்னாப்பிரிக்க வீரர்கள் சமபலத்துடன் தங்களது திறமையை வெளிப்படுத்த தயாராக இருக்கிறார்கள்.

ஐபிஎல் தொடருக்கும் தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கும் மிகப் பெரிய சம்பந்தம் உள்ளது. கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு இடையேயான உறவு அதிகரித்துள்ளது. இந்தியாவிலுள்ள ரசிகர்கள் தென்னாப்பிரிக்க அணிக்கு மிகுந்த ஆதரவு அளிக்கின்றனர். டி20 உலகக் கோப்பை விரைவில் தொடங்கவுள்ளதால்,  தென்னாப்பிரிக்க டி20 தொடர் தென்னாப்பிரிக்க வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் இடம் பிடிப்பதற்கான நல்ல  வாய்ப்பு என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.