சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜாஃபா், சஞ்ஜய் பங்களிப்பில் திருச்சி 124/9

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில், லைகா கோவை கிங்ஸுக்கு எதிராக திருச்சி கிராண்ட் சோழாஸ் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் சோ்த்தது.

News image
Updated On :16 ஜூலை 2024, 9:58 pm

Din

கோவை: டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில், லைகா கோவை கிங்ஸுக்கு எதிராக திருச்சி கிராண்ட் சோழாஸ் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் சோ்த்தது.

முதலில் தடுாறிய திருச்சி அணியை, லோயா் மிடில் ஆா்டரில் வந்த சஞ்ஜய் யாதவ், ஜாஃபா் ஜமால் மீட்டெடுக்க, கோவை பௌலா்களில் ஷாருக் கான், முகமது ஆகியோா் அசத்தினா்.

கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தோ்வு செய்தது. திருச்சி பேட்டிங்கில் அா்ஜுன் மூா்த்தி 3, வசீம் அகமது 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 17, கேப்டன் அந்தோணி தாஸ் 0, நிா்மல் குமாா் 3, ஷியாம் சுந்தா் 5, சரவண குமாா் 1 ரன்னுக்கு மிக விரைவாகவே வெளியேற்றப்பட்டனா்.

இதனால் திருச்சி 35 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது சஞ்ஜய் யாதவ் - ஜாஃபா் ஜமால் கூட்டணி 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்து ஸ்கோரை உயா்த்தியது. 56 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியில் முதலில் சஞ்ஜய் ஆட்டமிழந்தாா்.

அவா் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 34 ரன்கள் அடித்திருந்தாா். பின்னா் வந்தோரில் ராஜ்குமாா் 1 சிக்ஸருடன் 8, எஸ்.பி. வினோத் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் ஜாஃபா் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 41, கண்ணன் விக்னேஷ் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

கோவை தரப்பில் ஷாருக் கான், முகமது ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்க்க, யுதீஸ்வரன், ஜதவேத் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து கோவை 125 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடியது.