சென்னை வந்தடைந்த எம்.எஸ்.தோனி; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று (மார்ச் 5) சென்னை வந்தடைந்தார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று (மார்ச் 5) சென்னை வந்தடைந்தார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கவுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தொடங்கிய நிலையில், அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று சென்னை வந்தடைந்தார்.
இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் எக்ஸ் தளத்தில் தோனியின் புகைப்படத்தை பதிவிட்டு தல தரிசனம் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
தோனியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அவரது ரசிகர்கள் அவர் சென்னை வந்தடைந்ததை கொண்டாடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...